/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விண்ணை முட்டும் புகைமூச்சு முட்டும் மக்கள் விண்ணை முட்டும் புகைமூச்சு முட்டும் மக்கள்
விண்ணை முட்டும் புகைமூச்சு முட்டும் மக்கள்
விண்ணை முட்டும் புகைமூச்சு முட்டும் மக்கள்
விண்ணை முட்டும் புகைமூச்சு முட்டும் மக்கள்
ADDED : ஜூன் 12, 2025 11:24 PM

திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோட்டில் மாநகர எல்லைக்குள் சங்கிலிப்பள்ளம் கடந்து செல்கிறது. இந்த ஓடை மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் அருகே, ஓடைக்கரையில் அப்பகுதியினர் குப்பைகளை கொண்டு சென்று கொட்டி குவித்து விடுகின்றனர்.
ஓடையில் கழிவு தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த குப்பை கழிவுகளுக்கு தீ வைத்து விடுகின்றனர்.இந்த தீயிலிருந்து கிளம்பும் புகை, கருமேகம் போல அப்பகுதியில் சூழ்ந்து விடுகிறது. ரோட்டை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இந்த புகை காரணமாக வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் மூச்சு திணறலுக்கு ஆட்படுகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்படுகிறது. அருகேயுள்ள கட்டடங்கள், வீடுகளில், புகையுடன் கருமையான சாம்பலும் பறந்து சென்று சேருகிறது.ஓடைப்பள்ளத்தில் குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்டுவதை கண்காணித்து தடுக்கவேண்டும்.