/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சி.பி.எஸ்.இ., தேர்வில்பெம் பள்ளி தொடர் சாதனை சி.பி.எஸ்.இ., தேர்வில்பெம் பள்ளி தொடர் சாதனை
சி.பி.எஸ்.இ., தேர்வில்பெம் பள்ளி தொடர் சாதனை
சி.பி.எஸ்.இ., தேர்வில்பெம் பள்ளி தொடர் சாதனை
சி.பி.எஸ்.இ., தேர்வில்பெம் பள்ளி தொடர் சாதனை
ADDED : மே 24, 2025 11:15 PM

திருப்பூர்: சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் திருப்பர் பெம் பள்ளி தொடர்ந்து இரண்டாவது முறையாக மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
நடந்து முடிந்த சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்சலென்ஸ் பள்ளி மாணவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அறிவியல் பிரிவில், கிரண் ஆதித்யா, கணிதம் மற்றும் கணினி அறிவியலில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றார். மேலும், அவர் 491 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
ஜே.இ.இ., தேர்வில் 96.5 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலாண்மை பிரிவில் விகாஷினி 93.4 சதவீதமும், சுஜித் 93.2 சதவீதமும் பெற்றனர். அதே போல் 10ம் வகுப்பு பொது தேர்வில், சஷ்டி பிரணவ் 484 மதிப்பெண்ணுடன் முதலிடம்; மனன்யா 483 மதிப்ெபண்ணுடன் இரண்டாமிடமும், தன்வந்தி 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிசாமி, இணை செயலாளர் சரண்யா, மூத்த முதல்வர் கவுசல்யா ராஜன், முதல்வர் விஜய் கார்த்திக் உள்ளிட்டோர் பாராட்டினர்.
பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: தரமான கல்வி வழங்கி, மாணவர்கள் திறமையைக் கண்டறிந்து வளர்த்தும், பள்ளியின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பாக இந்த சாதனை அமைந்துள்ளது. நீட். ஜே.இ.இ., சி.யு.இ.டி., பவுண்டேசன் ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த திட்டங்கள் உள்ளன. ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள்; அனுபவக் கற்றல் மற்றும் ரோபோடிக்ஸ் பயிற்சி ஆகியவற்றுடன், நீச்சல், ஸ்கேட்டிங், கராத்தே, வில்வித்தை, செஸ், சிலம்பம் உள்ளிட்டவையும் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.