/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மெரிட் பள்ளி மாணவர் சாதனை 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மெரிட் பள்ளி மாணவர் சாதனை
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மெரிட் பள்ளி மாணவர் சாதனை
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மெரிட் பள்ளி மாணவர் சாதனை
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மெரிட் பள்ளி மாணவர் சாதனை
ADDED : மே 24, 2025 11:14 PM

திருப்பூர்: கொடுவாய், மெரிட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 பொது தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த அனிதா, 586 மதிப்பெண்; நந்தினி 581 மதிப்பெண் மற்றும் பிரதிக் ஷா 577 மதிப்பெண் பெற்றனர். அதேபோல், 10ம் வகுப்பு பொது தேர்வில், ஸ்வீட்லின் பிரார்த்தனா 495 மதிப்பெண்; சுகிஷ்ணு 492 மற்றும் பூர்ணாஸ்ரீ 490 மதிப்பெண் பெற்றனர். பொது தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர் களின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில், கேடயம் பதக்கம் வழங்கினர்.
பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 38 பேரில், இன்ஜினியரிங் கட் ஆப் 190க்கு மேல் மூன்று பேர்; 180க்கு மேல் 8 பேர்; 170க்கு மேல் 11 பேர் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்ற 59 பேரில், 490க்கு மேல் மூன்று பேர்; 480க்கு மேல் 8 பேர்; 470க்கு மேல், 15 பேர் மற்றும் 450க்கு மேல் 25 பேரும் மதிப் பெண் பெற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர்கள் மூலம் 'இ-டாக்' பாடத்திட்டம் பின்பற்றி போதிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கு எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.