ADDED : ஜூன் 30, 2025 12:23 AM

திருப்பூர், கோவில்வழி வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஒருவரின், மாட்டுத்தொழுவத்தில், சோர்வான நிலையில் ஆண் மயில் ஒன்று படுத்திருந்தது.
நோய் பாதிப்பு ஏற்பட்டு, சோர்வாக காணப்பட்டது. தெரு நாய்களிடம் இருந்து தப்ப, மாட்டு தொழுவத்துக்குள் வந்து படுத்திருந்தது. வனத்துறை ஊழியர்கள் இரண்டு வயதான ஆண் மயிலை மீட்டு, எடுத்துச்சென்றனர். கால்நடைத்துறை மூலம், உரிய சிகிச்சை அளித்து, குணமானதும் வனப்பகுதியில் விடப்படுமென, அவர்கள் தெரிவித்தனர்.