/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இரவினில் ஆட்டம்... பகலினில் சேட்டை... உயிரையும் 'வேட்டை'இரவினில் ஆட்டம்... பகலினில் சேட்டை... உயிரையும் 'வேட்டை'
இரவினில் ஆட்டம்... பகலினில் சேட்டை... உயிரையும் 'வேட்டை'
இரவினில் ஆட்டம்... பகலினில் சேட்டை... உயிரையும் 'வேட்டை'
இரவினில் ஆட்டம்... பகலினில் சேட்டை... உயிரையும் 'வேட்டை'

அமர்க்கள மைதானம்
இப்பகுதியில் உள்ள மைதானத்தில் தினமும் இரவு மற்றும் வார இறுதி நாட்களில் கும்பல் திரள்கிறது. மது அருந்துதல், ஆபாசமான வார்த்தைகளை பேசுதல், நீண்ட நேரம் குழுமியிருத்தல் என மைதானம் இரவில் அமர்க்களப்படுகிறது. போதையில் வாலிபர்கள் மோதி கொள்வது; மது பாட்டிலை போதையில் உடைப்பதெல்லாம் இங்கு சகஜம்.
நள்ளிரவு 'அட்ராசிட்டி'
இவர்களை வழிநடத்தும் சிலர் அதே பகுதியை சேர்ந்த செல்வாக்கு உள்ள நபர்கள் என்பதால் தங்களை முன்னிலைப்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நள்ளிரவில் அரட்டை என்ற பெயரில் சத்தம் போடுவது, மொபைல் போனில் பாட்டு போட்டு நடனம் ஆடுவது என 'அட்ராசிட்டி' செய்கின்றனர். இவை, மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது.
தெரிந்தும் தெரியாது
புகார் சென்றாலும், கட்சி செல்வாக்குள்ள சிலர் தலையீடுகளால் போலீசார் வந்த வேகத்தில் திரும்பி விடுகின்றனர். இதுபோன்று பிரச்னையெல்லாம்இங்கு நடக்கிறது என்று இப்பகுதி ஸ்டேஷனை சேர்ந்த கடை நிலை போலீசார் முதல் உயரதிகாரி வரை என, அனைவருக்கும் தெரியும்.


