/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக்; 100 சதவீதம் தேர்ச்சி சாதனை ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக்; 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக்; 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக்; 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக்; 100 சதவீதம் தேர்ச்சி சாதனை
ADDED : மே 22, 2025 03:42 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த முத்தணம்பாளையத்தில் இயங்கி வரும், ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில், மாணவி சன்மிதா, 493 மதிப்பெண் பெற்று முதல் இடம், சண்முகப்பிரியா, ஹஷினா பிரவீன், ஆகியோர், தலா, 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஜெபசெல்வியா, 486 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அறிவியல் பாடத்தில் இருவரும், சமூக அறிவியல் பாடத்தில் மூன்று பேரும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 16 மாணவர்களும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 25 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
தமிழ், அறிவியல் பாடத்தில் தலா ஒருவரும், ஆங்கிலம், சமுக அறிவியல் பாடத்தில் தலா இருவரும் நூற்றுக்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் சாவித்திரி தேவி, தாளாளர் கதிரவன், முதல்வர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.