ADDED : ஜன 08, 2024 01:31 AM
பல்லடத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் கூறியதாவது:
உந்துதல் இருந்தால் மட்டுமே, இயற்கை விவசாயத்துக்கு செல்ல முடியும். ஆரோக்கியத்துக்காக முக்கியத்துவம் தர வேண்டும் என்று கருதும் விவசாயிகளே இயற்கை விவசாயத்துக்கு செல்கின்றனர். விவசாயிகளே சுயமாக முயற்சித்து விற்பனை செய்ய வேண்டி உள்ளது. பொதுமக்கள், இயற்கை காய்கறிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் நிலை இருக்க வேண்டும். இயற்கைக்கு மாற விவசாயிகள் விரும்புகின்றனர்; செயற்கையை விட மக்கள் மறுக்கின்றனர். இயற்கை விவசாயம் என்பது மிக கடுமையான பாதைதான். ஆனால், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இயற்கை விவசாயத்தில் வேலைப்பளு, இடுபொருட்கள் செலவு குறைவு. மகசூல் படிப்படியாகத்தான் அதிகரிக்கும். இயற்கைக்கு மாற வேண்டியது விவசாயிகள் மட்டுமல்ல. மக்களின் கைகளில்தான் உள்ளது.