Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாய்க்காலில் சத்துமாத்திரை விவகாரம்: மாவட்ட சுகாதாரக்குழு விசாரணை

வாய்க்காலில் சத்துமாத்திரை விவகாரம்: மாவட்ட சுகாதாரக்குழு விசாரணை

வாய்க்காலில் சத்துமாத்திரை விவகாரம்: மாவட்ட சுகாதாரக்குழு விசாரணை

வாய்க்காலில் சத்துமாத்திரை விவகாரம்: மாவட்ட சுகாதாரக்குழு விசாரணை

ADDED : ஜூன் 10, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:

திருப்பூரில், வாய்க்கால் அருகே, 200 கிலோ சத்துமாத்திரை கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரக்குழுவினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

திருப்பூர் கோவில்வழி - அமராவதிபாளையம் சாலையில், பி.ஏ.பி., கிளை கால்வாய் அருகே, 200 கிலோ சத்து மாத்திரையை மாசுகட்டுப் பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள், பொதுமக்களின்புகாரின் பேரில் கைப்பற்றினர்.

அந்த மாத்திரைகள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயிலாக மக்களுக்கு வழங்குவதற்காக சுகாதாரத்துறையால் வினியோகிக்கப்படும் சத்து மாத்திரைகள் என்பதும், கடந்தாண்டுடன் (2024) காலாவதியாகியிருப்பதும் தெரியவந்தது.

அவற்றை மருத்துவக்கழிவுகள் கையாளும் நிறுவன வாகனத்தின் வாயிலாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை இணை, துணை இயக்குனர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதுதொடர்பான செய்தி, நேற்று முன்தினம் (8ம் தேதி) நம் நாளிதழிலில் வெளியாகியிருந்தது. விளைவாக, நேற்று, மாவட்ட சுகாதார நலக்குழுவினர் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறுகையில்,''அரசால் சப்ளை செய்யப்படும் சத்து மாத்திரைகள், பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இரும்புச்சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகள் நிறைய இருந்துள்ளது. இவற்றை யார் கொட்டியிருப்பர் என்பது குறித்து விசாரணையை துவக்கியுள்ளோம். அருகில் உள்ள மாநகர நகர் நல மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பு, அது நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை சேகரித்து வருகிறோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us