/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 சேர்க்கை இல்லை; பெற்றோர் ஏமாற்றம் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 சேர்க்கை இல்லை; பெற்றோர் ஏமாற்றம்
கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 சேர்க்கை இல்லை; பெற்றோர் ஏமாற்றம்
கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 சேர்க்கை இல்லை; பெற்றோர் ஏமாற்றம்
கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 சேர்க்கை இல்லை; பெற்றோர் ஏமாற்றம்
ADDED : மே 20, 2025 11:42 PM
உடுமலை; உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில், பிளஸ் 1 சேர்க்கை இல்லாததால், பெற்றோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்துக்கான கேந்திரிய வித்யாலா பள்ளி, உடுமலையில், 2019 ஆண்டு துவக்கப்பட்டது. உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தான் இப்பள்ளியும் செயல்படுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதலில் துவக்கப்பட்டு, கடந்தாண்டில் பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது. நடந்து முடிந்த பொதுத்தேர்வில், இப்பள்ளியைச் சேர்ந்த, 35 மாணவர்கள் தேர்வு எழுதி நுாறு சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.
ஆனால், இப்பள்ளியில் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்பு துவக்க முடியாததால், மாணவர்களின் பெற்றோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கான புதிய கட்டடம், ராகல்பாவி பிரிவு அருகே கட்டப்பட்டு வருகிறது. புதிய கல்வியாண்டு துவங்குவதற்குள், கட்டமைப்பு பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பணிகள் இன்னும் முழுமைபெற வில்லை. புதிய கட்டடத்தில் குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.
தற்போதுள்ள கட்டடத்தில், பிளஸ் 1 வகுப்பு துவங்குவதற்கான அடிப்படை ஆய்வகம் மற்றும் கூடுதல் அறை வசதிகள் இல்லை. இதனால் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை அருகிலுள்ள வேறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்வதற்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இங்கு 11ம் வகுப்பு துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.