/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூ மார்க்கெட்டில் துர்நாற்றம் நல்லுார் ரோட்டில் குளம் பூ மார்க்கெட்டில் துர்நாற்றம் நல்லுார் ரோட்டில் குளம்
பூ மார்க்கெட்டில் துர்நாற்றம் நல்லுார் ரோட்டில் குளம்
பூ மார்க்கெட்டில் துர்நாற்றம் நல்லுார் ரோட்டில் குளம்
பூ மார்க்கெட்டில் துர்நாற்றம் நல்லுார் ரோட்டில் குளம்
ADDED : மே 20, 2025 11:38 PM

திருப்பூர்,; காங்கயம் ரோடு, நல்லுார் பகுதியில் மழை நீர் வடிகால் உரிய வகையில் இல்லாமல், ரோட்டில் மழை நீர் தேங்கும் அவதி தொடர்கதையாக உள்ளது.
திருப்பூர் - காங்கயம் ரோட்டில், நல்லுார் பிரதான சந்திப்பு பகுதி, காசிபாளையம் ரோட்டுக்கு பிரிகிறது. கடுமையான வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் காணப்படும் இந்த ரோட்டில், லேசான மழை பெய்தால் கூட ரோட்டுக்கு அதிகளவில் மழைநீர் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. அவ்வகையில், நேற்று முன்தினம் பெய்த சிறு மழைக்கு தேங்கிய நீர், குளம் போலகாட்சியளிக்கிறது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சரியான முறையில், மழை நீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை போக்க வேண்டும்.