Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வசமாகும் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள்

வசமாகும் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள்

வசமாகும் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள்

வசமாகும் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள்

ADDED : மார் 23, 2025 11:27 PM


Google News
திருப்பூர் : பசுமை சார் உற்பத்தி என்ற கோட்பாட்டின்படி, சர்வதேச வர்த்தகர்களின் பார்வை திருப்பூரின் பக்கமாக திரும்பியிருக்கிறது.

திருப்பூரின் தனித்துவம் மிகுந்த சாதனைகளை, வெளிநாட்டு வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக முகமைகள் பார்வைக்காக கொண்டு சேர்க்க வேண்டுமென, 2023ல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் திட்டமிட்டது.

அதன்படி, வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச ஜவுளி கண்காட்சிகள், மத்திய அரசு டில்லியில் நடத்திய, 'பாரத் டெக்ஸ்' கண்காட்சிகளில், திருப்பூரின் பசுமை சார் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதன்பயனாக, வெளிநாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனத்தினர், நேரடியாக திருப்பூர் வந்து, இங்குள்ள வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை நேரில் பார்த்து வியப்படைகின்றனர். அதன்வாயிலாக, புதிய ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கின்றன.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்சுப்பிரமணியன் கூறுகையில், ''வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்ற கோட்பாட்டை, ஆவணமாக்கி, வெளிநாட்டு வர்த்தகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளோம்; அதற்கான முயற்சி தொடர்கிறது.

திருப்பூர், 15 ஆண்டுகளாக பசுமை சார் உற்பத்தியில் இருந்தாலும், அதனை ஆவணப்படுத்தாமல் இருந்தது; கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச அரங்குகளில் திருப்பூரின் சிறப்பை நிலைநாட்டியுள்ளோம். அதன்பயனாக, புதிய வர்த்தக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற நிலையை உணர்ந்து, சீனா மற்றும் வங்கதேசத்துடன், நீண்ட வர்த்தக தொடர்பில் இருந்த நிறுவனங்களும், இந்தியாவின் பக்கமாக திரும்பியுள்ளன; குறிப்பாக, திருப்பூரை நோக்கி வந்து, வர்த்தக வாய்ப்புகளை, ஆர்டர்களாக வழங்கி வருகின்றனர்,'' என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

வர்த்தகத்துக்கு சிறப்பு

சர்வதேச அளவிலான, வளர்ந்த நாடுகள், இறக்குமதி வர்த்தகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, பொருள் பயன்பாட்டில் மட்டுமல்ல; உற்பத்தி நிலையில் இருந்தே கண்காணிக்கப்பட வேண்டுமென, ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

இயற்கையை பாதிக்காத வகையில், 'கார்பன்' வெளியிடும் அளவுக்கு, அதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தையும் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதற்குத்தான், 'பசுமை தொழில்நுட்பம்' என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள், 2030ம் ஆண்டுக்குள், மொத்த இறக்குமதியில், 50 சதவீதமாவது, பசுமை சார் உற்பத்தியாக இருக்க வேண்டும் என சட்டம் இயற்றியுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us