ADDED : ஜூன் 19, 2025 04:47 AM
சேவாபாரதி தென் தமிழ்நாடு, திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி, தொழில் பாதுகாப்புக்குழு அலுவலகத்தில் நடந்தது.
மாநில துணை தலைவர் ராமசாமி, புதிய நிர்வாகிகளை அறிவித்தார். மாவட்ட தலைவராக கண்ணன், பொதுச்செயலாளராக அருண், பொருளாளராக மோகன்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். மாநில விவஸ்தா பிரமுக் சண்முகராஜா, சேவாபாரதி அமைப்பின் பணிகள், பொறுப்பாளர் மற்றும் தன்னார்வலர் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் அருண் நன்றி கூறினார்.