/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான சலுகை வழங்கப்படும்! திருப்பூரில் ராஜஸ்தான் எம்.பி., பேச்சுவடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான சலுகை வழங்கப்படும்! திருப்பூரில் ராஜஸ்தான் எம்.பி., பேச்சு
வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான சலுகை வழங்கப்படும்! திருப்பூரில் ராஜஸ்தான் எம்.பி., பேச்சு
வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான சலுகை வழங்கப்படும்! திருப்பூரில் ராஜஸ்தான் எம்.பி., பேச்சு
வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான சலுகை வழங்கப்படும்! திருப்பூரில் ராஜஸ்தான் எம்.பி., பேச்சு
ADDED : ஜன 28, 2024 12:13 AM

திருப்பூர்;திருப்பூரில் உ.பி., பீகார், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என, பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரில் தங்கி வேலைக்குச் செல்கின்றனர்; மற்றும், பனியன் சார்ந்த பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களுடன் கலந்தாய்வு கூட்டம், காலேஜ் ரோட்டில் உள்ள சேவா சமிதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜஸ்தான் எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பேசியதாவது:
உலகளவில் திருப்பூர் தனி அடையாளமாக உள்ளது. பனியன் தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டி தருகிறது. திருப்பூரில், பனியன் நிறுவன தொழிலில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலரும் செய்து வருகின்றனர். இதுபோல், தொழிலாளர்களும் லட்சக்கணக்கானவர்கள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
பனியன் தொழில் தொடர்பாக எந்த குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்தலாம். இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறையினருக்கு தேவைப்படும் சலுகைகளை பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.