/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா துவங்கியது ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா துவங்கியது
ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா துவங்கியது
ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா துவங்கியது
ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா துவங்கியது
ADDED : செப் 21, 2025 11:51 PM

திருப்பூர், அவிநாசி, குமார்நகரில், ஸ்ரீசிருங்கேரி சங்கரமடம் உள்ளது;ஸ்ரீசாரதாம்பாள் கோவிலும் அமைந்துள்ளது.
கோவிலில், 38 ம் ஆண்டு நவராத்திரி விழா, மஹா அபி ேஷகம், மஹா மங்கள ஆரத்தியுடன் நேற்று துவங்கியது. இன்று முதல், அக்., 1 ம் தேதி வரை, காலை மற்றும் மாலை நேரத்தில், லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜைகள் நடக்க உள்ளது. தினமும், காலை, 11:30 மணிக்கும், இரவு, 8:30 மணிக்கும், மஹா மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது. வரும், அக்., 2ம் தேதி விஜயதசமி சிறப்பு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு சாகம்பரி அலங்காரமும், மங்கள ஆரத்தியும் நடக்கிறது.