/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நஞ்சில்லா உணவு தேடலில் ஆர்வம்; வேளாண் கண்காட்சியில் தகவல் நஞ்சில்லா உணவு தேடலில் ஆர்வம்; வேளாண் கண்காட்சியில் தகவல்
நஞ்சில்லா உணவு தேடலில் ஆர்வம்; வேளாண் கண்காட்சியில் தகவல்
நஞ்சில்லா உணவு தேடலில் ஆர்வம்; வேளாண் கண்காட்சியில் தகவல்
நஞ்சில்லா உணவு தேடலில் ஆர்வம்; வேளாண் கண்காட்சியில் தகவல்
ADDED : செப் 23, 2025 05:56 AM

திருப்பூர்; வேளாண் துறை சார்பில், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு, மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, தாராபுரம் ஆனந்த் மகாலில் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி கண்காட்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை தவிர்த்து, தொழு உரம் சார்ந்த இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். இதன் வாயிலாக மண் வளம் பாதுகாக்கப்படும். இயற்கை விவசாய முறையால், மாசற்ற சூழலில் பயிர்கள் விளையும்; நஞ்சற்ற விளைப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். பொதுமக்கள் மத்தியில் நஞ்சில்லா உணவு தேடல் அதிகரித்திருப்பது, வரவேற்க்கதக்கது.
நம் நாட்டில், சிக்கிம் மாநிலம், 100 சதவீதம் உயிர்ம விவசாய மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தையும் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது. உயிர்ம வேளாண்மை சான்று பெற்ற உழவர்களுக்கு பதிவுக்கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது; இது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும்.இவ்வாறு, பேசினார்.