/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புரட்டாசி பட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள் புரட்டாசி பட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
புரட்டாசி பட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
புரட்டாசி பட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
புரட்டாசி பட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
ADDED : செப் 23, 2025 05:56 AM

பொங்கலுார்; தற்போது புரட்டாசி பட்டம் துவங்கியுள்ளது. புரட்டாசி முதல் கார்த்திகை வரை பருவமழை பெய்யும். புரட்டாசியில் சாகுபடி செய்யும் பயிர்கள் மழையை நம்பியே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிடும்.
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. புரட்டாசிப் பட்டத்தில் நஞ்சை, புஞ்சை என அனைத்து நிலங்களிலும் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சீசனில் தரிசு நிலம் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. இதனால் புரட்டாசி பட்டம் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானது. புரட்டாசி பட்டத்தில் தீவனப் பயிர்களான கம்பு, சோளம், தட்டை, கொள்ளு, பணப்பயிரான மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.
நிலத்தில் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்வதால் நிலம் சத்துக்களை இழந்து விடுகிறது. நிலத்தில் சத்துக்களை நிலை நிறுத்துவதற்காக ஆடு, மாடுகளின் கழிவுகளை தொழு உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது வழக்கம். தொழு உரங்கள் பற்றாக்குறை உள்ளதால் செயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
செயற்கை உரங்களால் நிலம், நீர், காற்று மாசுபாடு அடைவதால் இயற்கை விவசாயத்தின் பக்கம் விவசாயிகளின் பார்வை திரும்பி உள்ளது. ஆடு, மாடுகளின் சாணம் கிடைக்காத விவசாயிகள் கழிவுப்பஞ்சை விலைக்கு வாங்கி தொழு உரமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.