/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 9ல் வேலைநிறுத்தம் மா.கம்யூ., அழைப்பு 9ல் வேலைநிறுத்தம் மா.கம்யூ., அழைப்பு
9ல் வேலைநிறுத்தம் மா.கம்யூ., அழைப்பு
9ல் வேலைநிறுத்தம் மா.கம்யூ., அழைப்பு
9ல் வேலைநிறுத்தம் மா.கம்யூ., அழைப்பு
ADDED : ஜூன் 30, 2025 11:46 PM
திருப்பூர், ; மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் காளியப்பன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர் பேசினர்.
மத்திய அரசுக்கு எதிராக, விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வாலிபர் சங்கங்கள், மாதர் சங்கங்கள் சார்பில், ஜூலை 9ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
மா.கம்யூ., கட்சியின் அனைத்து அமைப்பினரும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, தேசிய அளவிலான போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.