/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கத்ரீனம்மாள் தேவாலய பெருவிழாசப்பரத்தில் அன்னை மரியா பவனி கத்ரீனம்மாள் தேவாலய பெருவிழாசப்பரத்தில் அன்னை மரியா பவனி
கத்ரீனம்மாள் தேவாலய பெருவிழாசப்பரத்தில் அன்னை மரியா பவனி
கத்ரீனம்மாள் தேவாலய பெருவிழாசப்பரத்தில் அன்னை மரியா பவனி
கத்ரீனம்மாள் தேவாலய பெருவிழாசப்பரத்தில் அன்னை மரியா பவனி
ADDED : செப் 09, 2025 11:15 PM

திருப்பூர்; திருப்பூர், புனித கத்ரீனம்மாள் சர்ச் தேர்த்திருவிழா, கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் குமரன் ரோட் டில் உள்ள, புனித கத்ரீனம்மாள் சர்ச்சில், அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா, ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மாலை, 5:30 மணிக்கு, சிறப்பு மறையுரை, திருப்பலி நடத்தப்பட்டது.நேற்று முன்தினம், தேர்த்திருவிழா நடந்தது. மாலை, கோவை அம்புரோஸ் கல்லுாரி செயலர் ஜெரோம் தலைமையில் திருப்பலி நடந்தது.
இதில், கத்ரீனம்மாள் சர்ச் குருக்கள் அருள் ஜெபமாலை, ஜேக்கப்தாஸ் ஆகியோரும் இணைந்து, திருப்பலி நிறைவேற்றினர். பின், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தேவ அன்னை, பவனியாக, தேவாலயத்தில் துவங்கி, குமரன் சாலை வந்து மீண்டும் சர்ச் சென்றடைந்தார்.