கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு
கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு
கணித பயிலரங்கம் மாணவியர் பங்கேற்பு
ADDED : பிப் 23, 2024 10:38 PM
உடுமலை:உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் சிறப்பு கணித பயிலரங்கம் நடந்தது.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி கணிதத்துறை சார்பில், 'இந்திய முறையை பயன்படுத்தி, கணித நுட்பங்கள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா துவக்கி வைத்தார். செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார்.
பயிலரங்கில், சிக்ச சன்ஸ்கிருதி யுத்தன்யாஸ் அமைப்பின் தமிழக மாநில தலைவர் இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் ேஹமா, 'வேத கணித சூத்திரங்களும், அதன் பயன்பாடுகள்' குறித்தும் எளிமையாக விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கணிதத்துறை பேராசிரியர்கள் பத்மாவதி, பங்கஜம் செய்திருந்தனர்.