Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 698 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.74.44 கோடி கடன் வழங்கல்

698 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.74.44 கோடி கடன் வழங்கல்

698 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.74.44 கோடி கடன் வழங்கல்

698 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.74.44 கோடி கடன் வழங்கல்

ADDED : செப் 19, 2025 09:47 PM


Google News
திருப்பூர்; திருப்பூர் வித்யா கார்த்தி மண்டபத்தில் நடந்த விழாவில், 698 மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 74.44 கோடி ரூபாய்க்கு கடனுதவி வழங்கப்பட்டது.

சேலத்தில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

திருப்பூரில், வித்யா கார்த்திக் மண்டபத்தில் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, வங்கி கடனுக்கான காசோலை மற்றும் அடையாள அட்டை வழங்கினர்.

மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் உள்ள 373 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 43.07 கோடி ரூபாய்; நகர பகுதியில் 325 குழுக்களுக்கு 31.37 கோடி ரூபாய் என, 698 குழுக்களுக்கு, மொத்தம் 74.44 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும், 896 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த நான்கு நிதியாண்டில், மொத்தம் 53 ஆயிரத்து 517 குழுக்களுக்கு 3 ஆயிரத்து 177 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் குழுவினர் தங்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி, உற்பத்தி செய்யும் பொருட்களை, அரசு பஸ்களில், 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். விழாக்காலங்களில் கோ-ஆப்டெக்ஸில் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு, அரசு வழங்கும் தள்ளுபடியுடன், கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித், மண்டல தலைவர்கள் பத்மநாபன், உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us