ADDED : ஜன 13, 2024 02:07 AM
திருப்பூர்;கடந்த, 2019ல், 15 வேலம்பாளையம், சிறுபூலுவப்பட்டியில் வசித்து வந்த இன்பவளவன், 37 என்பவர், இறந்து கிடந்தார்.
விசாரணையில், அவரிடம் வேலை செய்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன், 39 என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார், மகேந்திரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சொர்ணம் நடராஜன் நேற்று வழங்கிய தீர்ப்பில், மகேந்திரனுக்கு ஆயுள் சிறை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
வழக்கை சிறப்பாக கையாண்ட அப்போதைய இன்ஸ்பெக்டர் பதுருநிஷா பேகம், தற்போதைய இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசாரை, கமிஷனர் பிரவின்குமார் அபினபு பாராட்டினார்.