/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூளவாடி கோவிலில் நாளை கும்பாபிேஷகம் பூளவாடி கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
பூளவாடி கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
பூளவாடி கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
பூளவாடி கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 30, 2025 10:30 PM
உடுமலை; உடுமலை அருகே பூளவாடியில், அன்பிற்பிரியாளம்மன் உடனமர் மருதவாணேஸ்வரர், மதுரைவீரன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளன.
விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவகிரக நட்சத்திர ேஹாமம், வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.
நாளை (2ம் தேதி) காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது. மதியம் சுவாமிகளுக்கு மகா அபிேஷகத்துடன் தீபாராதனை நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அதை அடுத்து அம்மன் திருவீதி உலா நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.