ADDED : அக் 16, 2025 11:20 PM

திருப்பூர்: பழனியப்பா இன்டர் நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது.
காலம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். மழலையர் கலாம் வேடமணிந்து சிறப்பித்தனர். தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், திட்டக்கல்வி இயக்குனர் சதீஷ்குமார், நிர்வாக இயக்குனர் பிரகாஷ், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் அபிநயா பிரகாஷ், நிவேதா சதீஷ்குமார், முதல்வர் வித்யாசங்கர், மழலையர் பள்ளி நிர்வாக முதல்வர் யசோதை மனோகர், ஆலோசகர் உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.


