/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளிகளுக்கு இடையே கபடி எலையமுத்துார் முதலிடம்பள்ளிகளுக்கு இடையே கபடி எலையமுத்துார் முதலிடம்
பள்ளிகளுக்கு இடையே கபடி எலையமுத்துார் முதலிடம்
பள்ளிகளுக்கு இடையே கபடி எலையமுத்துார் முதலிடம்
பள்ளிகளுக்கு இடையே கபடி எலையமுத்துார் முதலிடம்
ADDED : பிப் 06, 2024 01:36 AM

உடுமலை;உடுமலை, சிருஷ்டி விகாஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். எலையமுத்துார் ஊராட்சித்தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் இந்திராணி முன்னிலை வகித்தார்.
பள்ளி துணை முதல்வர் கவிதா வரவேற்றார். போட்டிகளில் மாணவர் பிரிவில், எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், கல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மூன்றாமிடமும், ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நான்காமிடமும் பெற்றன.
மாணவியர் பிரிவில் தளவாய்ப்பட்டிணம் அரசு பள்ளி முதலிடத்திலும், குமரலிங்கம் அரசு பள்ளி இரண்டாமிடமும், மீனாட்சிபுரம் லட்சுமி விகாஸ் பள்ளி மூன்றாமிடத்திலும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி நான்காமிடத்திலும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு குமரலிங்கம்எஸ்.ஐ., மோகன், வக்கீல் சபரீஸ், பள்ளி தாளாளர் செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் ரியாஸ் நன்றி தெரிவித்தார்.