/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : மே 10, 2025 02:50 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அடையாள அட்டைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கண், காது, மூக்கு தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு குறித்து பரிசோதித்தனர். மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் புதிதாக 26 பேருக்கும்; 25 பேருக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், அடையாள அட்டை வழங்கினார்.
மருத்துவ முகாமின் ஒருபகுதியாக, தேர்தல் பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்த்தல், முகவரி, மொபைல் மாற்றம் உள்பட பல்வேறு திருத்தங்களுக்காக, மாற்றுத்திறனாளிகள் 22 பேருக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டது.