/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 62 பேரின் இலவச பட்டா ரத்தாகிறது! கலெக்டர் அதிரடி அறிவிப்பு 62 பேரின் இலவச பட்டா ரத்தாகிறது! கலெக்டர் அதிரடி அறிவிப்பு
62 பேரின் இலவச பட்டா ரத்தாகிறது! கலெக்டர் அதிரடி அறிவிப்பு
62 பேரின் இலவச பட்டா ரத்தாகிறது! கலெக்டர் அதிரடி அறிவிப்பு
62 பேரின் இலவச பட்டா ரத்தாகிறது! கலெக்டர் அதிரடி அறிவிப்பு
ADDED : மே 10, 2025 02:51 AM
திருப்பூர்,: திருப்பூர் தெற்கு தாலுகாவில் 2 பேர்; காங்கயத்தில் 60 பேர், இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் வசிக்காதது தெரியவந்துள்ளது. அவர்களின் பட்டாவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் தெற்கு தாலுகா, முத்தணம்பாளையம் கிராமம், க.ச.எண். 485/2ல், ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக நிலம் எடுப்பு செய்து, குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தமிழ் நிலம் மென் பொருளில், இலவச வீட்டுமனை பட்டாபெற்ற பயனாளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முத்தணம்பாளையத்தில் பட்டா பெற்ற வீரபாண்டி, கந்தன் ஆகிய இருவரும், குறிப்பிட்ட இடத்தில் வசிக்கவில்லை என்பதுகள ஆய்வில் தெரிய வருகிறது. நிபந்தனை மீறப்பட்டுள்ளதால், பட்டா ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள், பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை, 15 நாட்களுக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க ேவண்டும்; தவறினால், பட்டா ரத்து செய்யப்படும்.
காங்கயம் தாலுகாவில், ஊதியூர் கிராமம் க.ச.எண். 284/1ஏ காலையில், மொத்தம் 7.30 ஏக்கர் நிலம், 97 மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஐந்து கட்டங்களாக, மொத்தம் 85 பேருக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது.
கிராம கணக்கு வகைப்பாட்டில், பிற்படுத்தப்பட்டோர் நத்தம் என்கிற பெயரில் தாக்கலாகியுள்ளது. இதையடுத்து, 1998 முதல் 2020 வரை வழங்கப்பட்ட 85 பட்டாக்களில், 25 பட்டாக்கள் அடையாளம் காணப்பட்டு, அந்நபர்களுக்கு இ- பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 60 பயனாளிகளை கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், பட்டாவை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட நபர்கள், பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை, 15 நாட்களுக்குள், கலெக்டர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க ேவண்டும். இல்லாவிடில், பட்டா ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.