/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சி பட்ஜெட் கருத்து கூற அழைப்பு மாநகராட்சி பட்ஜெட் கருத்து கூற அழைப்பு
மாநகராட்சி பட்ஜெட் கருத்து கூற அழைப்பு
மாநகராட்சி பட்ஜெட் கருத்து கூற அழைப்பு
மாநகராட்சி பட்ஜெட் கருத்து கூற அழைப்பு
ADDED : மார் 25, 2025 06:52 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2025-26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பட்ஜெட்டில் மாநகராட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை மாநகராட்சி நிர்வாகம் பெறத் தயாராக உள்ளது.மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் ஏதேனும் தங்கள் யோசனையாக இருப்பின் அது குறித்து 26ம் தேதி மாலை 4:00 மணிக்குள் தெரிவிக்கலாம் என மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் கருத்துகளை 155304 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 73057 12225 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், mayortiruppur@gmail.com என்கிற, இ-மெயில் முகவரியிலும் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.