/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அவசியம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அவசியம்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அவசியம்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அவசியம்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அவசியம்
ADDED : செப் 22, 2025 12:38 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட பொது தொழிலாளர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்க பொது செயலாளர் சுப்ரமணி, திருப்பூர் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சிகளின் கமிஷனர்களுக்கு அனுப்பிய மனு:
சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில், 2014ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசு இதை 2015 முதல் அமல்படுத்தியது.
இதன்படி மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மூலம் இது போன்ற வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து, பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் உண்மையான வியாபார தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வணிக சான்று வழங்கியும், முறையாக வணிகக் குழு அமைத்தும் முறைப்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களும் தாமதம் ஏற்படுத்தாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.