/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிணற்றில் விழுந்த மான்; மீட்ட தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த மான்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் விழுந்த மான்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் விழுந்த மான்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கிணற்றில் விழுந்த மான்; மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ADDED : செப் 22, 2025 12:38 AM

அவிநாசி; அவிநாசி அருகே, 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமானைதீயணைப்பு மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
குட்டகம் மாரியம்மன் கோவில் அருகில் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 40 அடி ஆழ விவசாயக் கிணறு உள்ளது. இதில், 20 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
நேற்றுமுன்தினம் மதியம், உணவு தேடி அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று நாய்கள் துரத்தியதால் தவறி கிணற்றில் விழுந்தது.
வினோத்குமார் அளித்த தகவலின் பேரில், அவிநாசி தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி புள்ளி மானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், புள்ளிமான் உயிரோடு மீட்கப்பட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.