/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைமாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ADDED : ஜன 13, 2024 01:58 AM

திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மூன்று வாரங்களுக்குப்பின் நேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது; 153 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுவருகிறது.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் காரணமாக, கடந்த மூன்று வாரங்களாக, மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நீண்ட நாள் இடைவேளைக்குப்பின் நடத்தப்பட்டதால், நேற்றைய முகாமில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால், கூட்ட அரங்கம் நிரம்பியது. மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். நேற்றைய முகாமில், 120 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது; 30 பேருக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது.