/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நம்பிக்கை தானே வாழ்க்கை! பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு தாமதம்; சூழ்நிலை கருதி தொழிற்சங்கங்கள் அமைதி நம்பிக்கை தானே வாழ்க்கை! பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு தாமதம்; சூழ்நிலை கருதி தொழிற்சங்கங்கள் அமைதி
நம்பிக்கை தானே வாழ்க்கை! பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு தாமதம்; சூழ்நிலை கருதி தொழிற்சங்கங்கள் அமைதி
நம்பிக்கை தானே வாழ்க்கை! பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு தாமதம்; சூழ்நிலை கருதி தொழிற்சங்கங்கள் அமைதி
நம்பிக்கை தானே வாழ்க்கை! பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு தாமதம்; சூழ்நிலை கருதி தொழிற்சங்கங்கள் அமைதி
ADDED : செப் 01, 2025 11:05 PM

திருப்பூர்: அமெரிக்காவின் வரி உயர்வு பிரச்னையால், திருப்பூர் பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்குவதில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம், இம்மாதத்துடன் நிறைவடைகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பேச்சுவார்த்தை நடத்தி, புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, 2021ம் ஆண்டு 32 சதவீத சம்பள உயர்வுடன், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
வரும், 30ம் தேதியுடன் சம்பள உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகிறது; அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தையை துவக்கி, புதிய ஒப்பந்தம் உருவாக்க, தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சம்பள உயர்வு, பஞ்சப்படி உயர்வு, வாடகை படி, உட்பட 16 அம்ச கோரிக்கைகள், பனியன் தொழிற்சங்கங்கள் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
விரைவில், முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டுக்குழுவை உருவாக்கி, ஒன்றுபட்ட கோரிக்கையை தயாரித்து, பனியன் உற்பத்தி அமைப்புகளிடம் வழங்கி, சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்படும்.
சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட சங்கங்கள், சம்பள உயர்வு கோரிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. செப்., 2வது வாரத்தில், பொது கோரிக்கையை தயாரித்து அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், 120 முதல் 150 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு தேவையென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க இறக்குமதி வரி உயர்வு விவகாரம், பூதாகரமாக கிளம்பியுள்ளதால், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை துவக்குவதில், தடை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும், தீபாவளி ஆர்டர் மீதான உற்பத்தி வேகமெடுத்துள்ளதாலும், தொழில் அமைப்புகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை துவக்குவது சரியாக இருக்காது என, தொழிற்சங்கங்களும் அமைதி காத்து வருகின்றன. முதல்கட்டமாக, தொழிலாளர் வேலை இழப்பை தடுக்க வேண்டுமென குரல்கொடுக்க துவங்கிவிட்டனர்.
இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், 'பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம், செப்., 30ம் தேதியுடன் காலாவதியாகிறது. இருதரப்பும் சுமூகமாக பேசி, சம்பள உயர்வு நிர்ணயம் செய்யப்படும்.
அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால், சம்பள உயர்வு ஒப்பந்தம் உருவாக்கத்தில் தாமதம் ஏற்படலாம்; இருப்பினும், எவ்வளவு நாட்கள் கடந்து ஒப்பந்தம் நிறைவேறினாலும், முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்துவோம்,' என்றனர்.
அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால், சம்பள உயர்வு ஒப்பந்தம் உருவாக்கத்தில் தாமதம் ஏற்படலாம்; இருப்பினும், எவ்வளவு நாட்கள் கடந்து ஒப்பந்தம் நிறைவேறினாலும், முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும்