/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து எழுச்சி நாள் விழா ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து எழுச்சி நாள் விழா
ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து எழுச்சி நாள் விழா
ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து எழுச்சி நாள் விழா
ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து எழுச்சி நாள் விழா
ADDED : செப் 20, 2025 07:58 AM
பொங்கலுார்; கொடுவாய் பஸ் ஸ்டாப் அருகில், ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் ஜெயந்தி விழா, ஹிந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
விழாவில், ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பொதுச் செயலாளர் ஆனந்த், துணைத் தலைவர் சதீஷ், ஒன்றிய செயலாளர் ஹரிகுமார், செயற்குழு உறுப்பினர் குமார், அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஜெயபாரதி, கொடுவாய் வாழும் கலை ஆசிரியர் சசி உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல அலகுமலை, அவிநாசி பாளையம், வேலம்பட்டி ஆகிய இடங்களிலும் ஹிந்து எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
n ஹிந்து முன்னணி பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில், திருப்பூர், பி.என்., ரோடு, சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட ராமகோபாலன் உருவ படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.