/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'தினமலர்' சார்பில் அக்., 2ம் தேதி குழந்தைகளுக்கான வித்யாரம்பம்'தினமலர்' சார்பில் அக்., 2ம் தேதி குழந்தைகளுக்கான வித்யாரம்பம்
'தினமலர்' சார்பில் அக்., 2ம் தேதி குழந்தைகளுக்கான வித்யாரம்பம்
'தினமலர்' சார்பில் அக்., 2ம் தேதி குழந்தைகளுக்கான வித்யாரம்பம்
'தினமலர்' சார்பில் அக்., 2ம் தேதி குழந்தைகளுக்கான வித்யாரம்பம்
ADDED : செப் 20, 2025 07:57 AM
திருப்பூர் ; 'தினமலர்' மற்றும் ஸ்ரீசக்தி கல்வி குழுமம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அறக்கட்டளை ஆகியன சார்பில், குழந்தைகளுக்கான, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஸ்ரீபுரம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், அக்., 2 ம் தேதி நடக்க உள்ளது.
நவராத்திரி விழாவின் நிறைவாக, வெற்றித்திருவிழாவாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளில், குழந்தைகள் கற்றலை துவக்குகின்றனர். தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி, குழந்தைகள் கரம் பற்றி, 'அ' 'ஆ' என்று எழுத வைத்து, நம் முன்னோர்கள் கற்றலை துவக்கி வைத்தனர். பாரம்பரியமாக, நாமும் அதையே இன்றும் பின்தொடர்ந்து வருகிறோம்.
வீட்டில் உள்ள இளம் தளிர்களின் பிஞ்சு விரல்களை பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பிக்க, இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கு, கற்றலை துவக்கும் வைபவத்தை, 'தினமலர்' நாளிதழ் நடத்தி வருகிறது.
அவ்வகையில், இந்தாண்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சார்பில், 'ஆ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற வித்யாரம்ப நிகழ்ச்சி, அக்., 2ம் தேதி காலை, 8:00 முதல், 10:30 மணி வரை, அவிநாசி அருகேயுள்ள ராக்கியாபாளையம், ஸ்ரீபுரம், ஐஸ்வர்யா கார்டனிலுள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், வித்யாரம்பம் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம் இதில், இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளுடன் வந்து, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாளின் அனுக்கிரகத்துடன் வித்யாரம்பம் செய்து வைக்கலாம்; அனுமதி முற்றிலும் இலவசம்.
பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், சிலேட், பென்சில், பேனா, கிரேயான்ஸ் உட்பட கல்வி பொருட்கள் அடங்கிய 'கிட்' இலவசமாக வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, வித்யாரம்பத்தில் கல்விப்பயணத்தை துவக்க உள்ள குழந்தைகளுக்கு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்து பயில, விஜயதசமி மாணவர் சேர்க்கைக்கு, 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கவும், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி முன்வந்துள்ளது.
சுற்றுப்பகுதிகளில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை அழைத்து வர, போக்குவரத்து வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், அவிநாசி, அன்னுார், அணைப்புதுார், காந்தி நகர், சோமனுார், தெக்கலுார் ஆகிய பகுதிகளில் இருந்து, ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலுக்கு வந்து செல்ல வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களை, 96887 53040 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.