/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பழநியில் பக்தர்கள் அவமதிப்பு: ஹிந்து முன்னணி கண்டனம்பழநியில் பக்தர்கள் அவமதிப்பு: ஹிந்து முன்னணி கண்டனம்
பழநியில் பக்தர்கள் அவமதிப்பு: ஹிந்து முன்னணி கண்டனம்
பழநியில் பக்தர்கள் அவமதிப்பு: ஹிந்து முன்னணி கண்டனம்
பழநியில் பக்தர்கள் அவமதிப்பு: ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : ஜன 06, 2024 01:16 AM
திருப்பூர்;'பழநி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை அவமதிக்கும் விதமாக அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். இதன் பின்னணியில் நாத்திக சக்திகள் உள்ளதாக சந்தேகம் உள்ளது' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கடந்த 4ம் தேதி கரூர், தோகைமலையிலிருந்து 500 பக்தர்கள், 48 நாள் விரதமிருந்து, காவடி எடுத்து பழநி முருகன் கோவிலுக்கு வந்தனர்.காவடிக் குழுவினர் திருவாவினன்குடியிலிருந்து மேளதாளத்துடன் வருவது வழக்கம். பல நுாறாண்டாக இந்த நடைமுறை உள்ளது.
ஆனால், கோவில் உதவி கமிஷனர் லட்சுமி, கமேளதாளத்துடன் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்துவது போன்ற இதுவரையில்லாத விதிமுறைகளை அறிவித்துள்ளார். இவர், ஏற்கனவே, கும்பாபிஷேகத்தின் போது, ஆகம விதிமீறல், கட்டாய நன்கொடை என வரம்பு மீறியுள்ளார்.
பழநியில் மேளதாளம் அடிக்கும் தொழிலில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். உதவி ஆணையரின் இந்த செயலால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிக வருமானம் வரும் கோவிலில் பக்தர்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.
பக்தர்களை அறநிலையத்துறை அடிமைகளாக நடத்துகிறது. இதன் பின்னணியில் திராவிட நாத்திக சதி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தமிழகத்தின் ஆணிவேராக உள்ள ஆன்மீகத்தை சீர்குலைக்க நினைக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் பக்தர்களை திரட்டி, ஹிந்து முன்னணி சார்பில், போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.