/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருமூர்த்திமலையில் கனமழை அருவிக்கு செல்ல தடை திருமூர்த்திமலையில் கனமழை அருவிக்கு செல்ல தடை
திருமூர்த்திமலையில் கனமழை அருவிக்கு செல்ல தடை
திருமூர்த்திமலையில் கனமழை அருவிக்கு செல்ல தடை
திருமூர்த்திமலையில் கனமழை அருவிக்கு செல்ல தடை
ADDED : மே 24, 2025 09:46 PM

உடுமலை : உடுமலை அருகே, திருமூர்த்திமலை பகுதிகளில் கனமழை பெய்வதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
இதனால், மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், நேற்று காலை முதல், அருவியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால், மலையடிவாரத்தில் தடுப்புகள் அமைத்து, சுற்றுலா பயணியர் யாரையும் அருவிக்கு அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


