/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கல்லீரல் நோய் தடுக்க ஆரோக்கிய உணவு கைகொடுக்கும்!கல்லீரல் நோய் தடுக்க ஆரோக்கிய உணவு கைகொடுக்கும்!
கல்லீரல் நோய் தடுக்க ஆரோக்கிய உணவு கைகொடுக்கும்!
கல்லீரல் நோய் தடுக்க ஆரோக்கிய உணவு கைகொடுக்கும்!
கல்லீரல் நோய் தடுக்க ஆரோக்கிய உணவு கைகொடுக்கும்!
ADDED : ஜூலை 27, 2024 11:51 PM
'ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொண்டால், கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்,' என, டாக்டர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
நம் அடிவயிற்றின் வலது மேல் பகுதியில், உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது, கல்லீரல். நாம் உட்கொள்ளும் உணவுகளை ஆற்றலாக மாற்றி, தேவையான சத்துக்களைப் பிரித்துக் கொடுப்பது, உடலுக்கு தேவையான சில புரதச்சத்துக்களை உற்பத்தி செய்வது, உணவில் உள்ள நச்சை நச்சற்றத்தாக மாற்றுவது போன்றவை கல்லீரலில் முக்கிய பணி.
செரிமானம், புரத உற்பத்தி, சேமித்தல், நச்சற்றத்தாக மாற்றுதல் என ஏறக்குறைய, 500 முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது. இகல்லீரல் முக்கியத்துவத்தை உணர்வதுடன், கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறி, தடுப்பு மற்றும் சிகிச்சை முறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரையை ஏற்று, இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நம் இதயம், மூளையை போலவே கல்லீரலும் மிக முக்கிய உள்ளுறுப்பாகும். ஆனால், நம்மில் பலர் இதயம், மூளை உள்ளிட்ட உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்லீரலுக்கு கொடுப்பதில்லை. மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொள்வது, வைரஸ் தொற்று, சுகாதாரமற்ற உணவு, போதிய அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் கல்லீரலை பாதிக்கிறது.
கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம் கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமி 'ஹெபடைடிஸ்'. இதில், ஐந்து வகை இருந்தாலும்,'பி' மற்றும் ' சி' ஆகியவை தான் தீவிர தன்மை வாய்ந்தது.
அறிகுறி என்ன?
கல்லீரலை சரியாக கவனித்து கொள்ளாவிட்டால், உடலின் பல இயக்கம் பாதிக்கப்படும். தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறும், மஞ்சள் காமாலை, மூட்டுவலி, காய்ச்சல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மயக்கம், எடை குறைவு, கணுக்கால் வீக்கம், உள்ளிட்ட அறிகுறிகள் தெரியும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நம் உடலின் இயக்கம், செயல்பாடு, கல்லீரல் குறித்து டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மாற்றங்கள் இருப்பின் உடன் சிகிச்சையை துவங்க வேண்டும்.
- இன்று (28ம் தேதி) உலகக்கல்லீரல் அழற்சி நாள்.