ஆன்மிகம்
பூச்சாட்டு பொங்கல் விழாசெல்லாண்டியம்மன் கோவில், வளம்பாலம் அருகில், திருப்பூர். பூச்சாட்டு விழா - மாலை, 6:00 மணி.
பொன்னுாஞ்சல் வைபவம்
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ கோதாதேவி (ஆண்டாள் நாச்சியார்) அம்மனுக்கு பொன்னுஞ்சல் வைபவம் - இரவு 7:00 மணி.
மஞ்சள்நீர் அபிேஷம்
ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள்நீர் அபிேஷகம், கோட்டை மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்து அன்னையர் முன்னணி. மாலை 5:00 மணி. கோவிலில் இருந்து தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு வரை மஞ்சள் நீர் ஊர்வலம் - மாலை 6:00 மணி.
திருவிளக்கு பூஜை
ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், சர்க்கார் பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி வழிபாடு சிவசக்தி கலசஸ்தாபனம், ருத்ரஜெபம் ஹோமம், பூர்ணாகுதி - காலை 11:00 மணி. 16 திரவியங்களுடன் மகா அபிேஷகம் - மதியம் 12:30 மணி. அலங்காரம், மகா தீபாராதனை - மதியம் 2:00 மணி. பிரதோஷ சிறப்பூ பூஜை - மாலை 4:30 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பிரதோஷ பூஜை
ஸ்ரீ விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், திருப்பூர். பிரதோஷ சிறப்பூ பூஜை - மாலை 4:30 மணி.
* ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.
திருமஞ்சன அபிேஷகம்
வரதராஜ பெருமாள் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். மகாலட்சுமி தாயாருக்கு விசேஷ திருமஞ்சன அபிேஷகம் - காலை 9:00 மணி. ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம், மற்றும் அபிேஷகம் - மாலை 5:00 மணி.
மூல மந்திர ேஹாமம்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு ேஹாமம், அபிேஷகம் - காலை 7:00 மணி. தீபாராதனை - 8:30 மணி.
சிறப்பு அலங்காரம்
ஆடி வெள்ளி சிறப்பு அலங்காரம், பூஜைகள், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 9:30 மணி. அலங்கார பூஜை - காலை 11:00 மணி. அன்னை கலைவாணி சரஸ்வதி சிறப்பு அலங்காரம் - மதியம் 12:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
* ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
பொது
கட்டுமான பொருள் கண்காட்சி
19 வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். அரங்கம் திறப்பு விழா - காலை 9:30 மணி. கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. கலைநிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி முதல்.
குறைகேட்பு கூட்டம்
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.
உதவி வழங்கும் விழா
தமிழக அரசின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பணி ஆணை வழங்கும் விழா, கிருஷ்ணா மஹால், பெருமாநல்லுார் - கூலிபாளையம் ரோடு, கணக்கம்பாளையம். ஏற்பாடு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. மாலை 4:30 மணி.
வேலை வாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
கம்பன் விழா போட்டி
லயன்ஸ் கிளப் அரங்கம், டவுன்ஹால் அருகில், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கம்பன் கழகம். மாணவ, மாணவியருக்கு போட்டி - மதியம் 2:00 மணி. பள்ளி ஆசிரியருக்கான போட்டி - மாலை 4:00 மணி.
வெள்ளி கொடுக்கும்
அயோத்தி ராமர் கோவிலில் ராமருக்கு பாதம் செய்வதற்காக வெள்ளி கொடுக்கும் நிகழ்ச்சி, முருகன் பாத்திரக்கடை, அனுப்பர்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: அகில பாரத ஹிந்து மகா சபா. காலை 9:00 மணி.
நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி
மத்திய இணை அமைச்சர் முருகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, புதிய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி. மாலை 6:30 மணி.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை துவக்கம், வசந்த் அண்ட் கோ, குமரன் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
* ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.