/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஊராட்சி மக்கள் மேயரிடம் வேண்டுகோள் ஊராட்சி மக்கள் மேயரிடம் வேண்டுகோள்
ஊராட்சி மக்கள் மேயரிடம் வேண்டுகோள்
ஊராட்சி மக்கள் மேயரிடம் வேண்டுகோள்
ஊராட்சி மக்கள் மேயரிடம் வேண்டுகோள்
ADDED : ஜூலை 18, 2024 10:43 PM
திருப்பூர்;நாச்சிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு மாநகராட்சியில் மேயரிடம் முறையிட்டனர்.
திருப்பூர் அருகே நாச்சிபாளையம் ஊராட்சி, ரங்கம்பாளையம் பகுதியில் ஜி.எம்.,கார்டன் உள்ளது. 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர், வடிகால், தெரு விளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இவற்றை ஏற்படுத்தித்தர வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாநகராட்சிஅலுவகத்தில் மேயர் தினேஷ்குமாரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி முறையிட்டோம். இதற்காக, ஊராட்சி தலைவரை, 10 முறைக்கு மேல் நேரில் சென்று சந்தித்தும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதி மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.