ADDED : ஜன 05, 2024 11:20 PM
உடுமலை:கோவை சகோதயா இன்டர் பள்ளியின் சார்பில் இப்பள்ளியில் கோ - கோ போட்டி நடக்கிறது. நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட பிரிவு மற்றும் ஒன்பது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் இரண்டு நாட்கள் போட்டி நடக்கிறது.
பள்ளி இயக்குனர் பானுமதி வரவேற்றார். பள்ளி முதல்வர் சரளா தேவி போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.
பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். நேற்று நடந்த முதல் சுற்றில், வெற்றி பெற்ற பள்ளி அணிகள் இன்று நடக்கும் இறுதி போட்டியில் பங்கேற்கின்றன. போட்டி நிறைவு விழா இன்று நடக்கிறது.