"கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும்": சோனியா நம்பிக்கை
"கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும்": சோனியா நம்பிக்கை
"கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும்": சோனியா நம்பிக்கை
UPDATED : ஜூன் 03, 2024 03:53 PM
ADDED : ஜூன் 03, 2024 11:28 AM

புதுடில்லி: 'கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறும். எங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும்' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
' லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பான்மையுடன் வெற்றி பெறும். மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார். 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும்'என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, சோனியா கூறியதாவது: ‛‛ தேர்தலலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறும். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும் என நம்பிக்கை உள்ளது. நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்''. இவ்வாறு அவர் கூறினார்.
கற்பனை கணிப்பு.
‛‛இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.