/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க... 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க... 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க... 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க... 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்
உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க... 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்
ADDED : ஜன 27, 2024 11:47 PM

திருப்பூர்:தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., திட்டத்தில் உபரி நீரைத் திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் பல கட்டப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து, நான்கு முறையும், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், 3 நாட்களாக அவர்கள் வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: பல கட்ட போராட்டம் நடத்தி, பலமுறை அரசு தரப்பில் பேச்சு நடத்தாமல் இழுத்தடிக்கப்படுகிறது. எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, அரசுக்கு எங்கள் நிலையை உணர்த்தும் விதமாகவும், இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
திருமூர்த்தி அணை உபரிநீர் வழங்கப்படாத நிலையில், உப்பாறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 2 டி.எம்.சி., நீரும் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவும் கண்டு கொள்ளாமல் உள்ளது. தாராபுரம் தாலுகாவில் பனைமரத்துப்பாளையம் தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் குறைந்து விட்டது. குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.