/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுபெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 11, 2024 07:10 AM

திருப்பூர் : தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மரியாலயா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு இயக்கம் சார்பில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர், பாளையக்காடு முருகப்பசெட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், மரியாலயா இல்ல களப்பணியாளர் கேத்தரின் ஜாய் வரவேற்றார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் அந்தோணி ெஷர்லின், மரியாலயா இல்ல நிர்வாக இயக்குனர் லுார்து சகாயம் ஆகியோர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு அம்சங்கள், 'போக்சோ' சட்டம், பெண் குழந்தைகள் பொது இடங்களில் தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சாந்தி, பிரேம் உள்ளிட்டோர் பேசினார். நிறைவாக, உதவி தலைமை ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.