/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரோட்டில் உருவாகுது வனம்; நெடுஞ்சாலை துறை சுறுசுறுப்பு ரோட்டில் உருவாகுது வனம்; நெடுஞ்சாலை துறை சுறுசுறுப்பு
ரோட்டில் உருவாகுது வனம்; நெடுஞ்சாலை துறை சுறுசுறுப்பு
ரோட்டில் உருவாகுது வனம்; நெடுஞ்சாலை துறை சுறுசுறுப்பு
ரோட்டில் உருவாகுது வனம்; நெடுஞ்சாலை துறை சுறுசுறுப்பு
ADDED : செப் 20, 2025 08:07 AM

பொங்கலுார்; கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்து சில வருடங்கள் ஆகி விட்டது. கனி மற்றும் நிழல் தரும் மரங்கள் வெட்டப்பட்டதால் சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வெயில் கொடுமை தாங்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது நெடுஞ்சாலைத்துறை வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி உள்ளது.
மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு உயிர் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. விரைவில் பெய்யும் பருவமழைக்கு அவை செழித்து வளர்ந்து விடும். அவை பயன் தர சில ஆண்டுகள் ஆகும் என்றாலும் மரங்களால் சூடு தணிந்து குளிர்ந்த சூழல் நிலவும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.