/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எதிர்பார்ப்புகள் -1:விசைத்தறியாளருக்கு புதிய கூலிஎதிர்பார்ப்புகள் -1:விசைத்தறியாளருக்கு புதிய கூலி
எதிர்பார்ப்புகள் -1:விசைத்தறியாளருக்கு புதிய கூலி
எதிர்பார்ப்புகள் -1:விசைத்தறியாளருக்கு புதிய கூலி
எதிர்பார்ப்புகள் -1:விசைத்தறியாளருக்கு புதிய கூலி
ADDED : ஜூன் 25, 2024 12:35 AM

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் அளித்த மனு:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில், 90 சதவீதம், கூலிக்கு நெசவு செய்யப்படுகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள், 11 ஆண்டுகளாக நியாயமான கூலி உயர்வு வழங்கவில்லை.
மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை, விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு காரணமாக செலவினங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளன. கடந்த 2022ல் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, சோமனுார் ரகத்துக்கு 60 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 50 சதவீதமும் கூலி உயர்வு வழங்கவேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய கூலி உயர்வு பெற்றுத்தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.