/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சர்வம் குப்பை மயம் சுகாதாரம் 'மாயம்' சர்வம் குப்பை மயம் சுகாதாரம் 'மாயம்'
சர்வம் குப்பை மயம் சுகாதாரம் 'மாயம்'
சர்வம் குப்பை மயம் சுகாதாரம் 'மாயம்'
சர்வம் குப்பை மயம் சுகாதாரம் 'மாயம்'
ADDED : ஜூன் 07, 2025 11:15 PM

திருப்பூர்: குப்பை கொட்டப்பட்ட காளம்பாளையம் பாறைக்குழி போன்ற இடங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டம் காரணமாக அன்றாடம் குப்பையை அகற்றுவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், இ.பி., காலனி, எஸ்.ஏ.பி., பின்புறம், லட்சுமி தியேட்டர் மெயின் ரோடு என, பல இடங்களில் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, 24வது வார்டு சாமுண்டிபுரம் லட்சுமி தியேட்டர் மெயின் ரோட்டில் குப்பை கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாக அகற்றப்படாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் செவி சாய்க்கவில்லை. கடுமையான துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.