Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எருக்காடு புதிய மின் பகிர்மானம் இரட்டைப்படை மாத மின் கணக்கீடு

எருக்காடு புதிய மின் பகிர்மானம் இரட்டைப்படை மாத மின் கணக்கீடு

எருக்காடு புதிய மின் பகிர்மானம் இரட்டைப்படை மாத மின் கணக்கீடு

எருக்காடு புதிய மின் பகிர்மானம் இரட்டைப்படை மாத மின் கணக்கீடு

ADDED : மார் 28, 2025 03:22 AM


Google News
திருப்பூர்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எருக்காடு மின்பகிர்மான பகுதிகளில், இரட்டைப்படை மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மின்பகிர்மான வட்டம், தெற்கு உப கோட்டம், தெற்கு பிரிவு அலுவலகத்தை சார்ந்த பூச்சக்காடு பகிர்மானத்திலிருந்து, 800 இணைப்பு பிரிக்கப்பட்டு, எருக்காடு என்கிற புதிய பகிர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த மின் இணைப்புகளுக்கு புதிய இணைப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்., மாதம் முதல் இரட்டைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப் படுகிறது.

எருக்காடு 1 முதல் 5 வீதிகள், காதி காலனியில் மூன்று வீதிகள், எருக்காடு விரிவு வீதிகள், குமரன் அவென்யூ, கருவம்பாளையம் விநாயகர் கோவில் பஸ்ஸ்டாப் முதல் நாயர் ஹாஸ்பிடல் வரை மேற்கு பகுதிகள், நாயர் ஹாஸ்பிடல் முதல் கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு சந்திப்பு வரை வடக்கு பகுதிகள், கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு லிட்டில் ஸ்டார் பள்ளி முதல் மங்கலம் மெயின் ரோடு சந்திப்பு வரை கிழக்கு பகுதிகள், மங்கலம் ரோடு கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு சந்திப்பு முதல் கருவம்பாளையம் விநாயகர் கோவில் பஸ்ஸ்டாப் வரை தெற்கு பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளுக்கு, வரும் காலங்களில், பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படும்.

கணக்கீடு செய்யப்பட்ட, 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இனிவரும் நாட்களில், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களை பயன்படுத்த வேண்டும்; புதிய மின் கட்டண அட்டைகளை, அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us