/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : பிப் 12, 2024 12:08 AM
மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஒன்றியப்பகுதிகளில், ரூ.2.10 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ. 5.12 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் துவக்க விழா நடந்தது.
மடத்துக்குளம் ஒன்றியம், ஜோத்தம்பட்டி ஊராட்சி, ஜோதி நகர் மற்றும் பாப்பான்குளம் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலா, ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவி கட்டடங்களை, அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
மேலும், மைவாடி ஊராட்சியில், ரூ.60.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுழைவாயில் என, 2.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், 4.92 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி பிரதான கால்வாய், கி.மீ., 7.5 முதல், 16.5 வது வரை, கால்வாய் கீழ்பகுதியில் அமைந்துள்ள, குறுக்கு கட்டட அமைப்புகளை புனரமைக்கும் பணி,
மைவாடி ஊராட்சி போளரப்பட்டியில், ரூ.20.20 லட்சம் மதிப்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் அமைக்கும் பணி என, ரூ.5.12 கோடி மதிப்பிலான பணியை துவக்கி வைத்தார்.