Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்

நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்

நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்

நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்

UPDATED : மார் 27, 2025 09:59 PMADDED : மார் 27, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
திஹோக்: நெதர்லாந்தில் மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்தது. தக்க சமயத்தில் போலீசார் அவனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாம் என்ற பகுதியில் நிக்கோலஸ்டார்ட் ,டாம்ஸ்கொயர் என்ற இரு இடங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

சம்பவத்தன்று இங்கு வந்த மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக குத்தினார். இதில் 5 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலர் கத்தி குத்தில் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவத்தால் டாம் ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.

தகவலறிந்த போலீசார் ரோந்து வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் அந்த நபர் கண்காணிக்கப்பட்டு அவனை மடக்கி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us