ADDED : ஜன 06, 2024 12:34 AM

பொங்கலுார்:பொங்கலூர் வேலம்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
கட்டடம் கட்டியதில் இருந்து போதிய பராமரிப்பு பணி செய்யவில்லை. இதனால், கான்கிரீட் சிலாப்பு ஆங்காங்கே உடைந்து விழுந்து வருகிறது. அங்கு அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நாள்தோறும் சென்று வருகின்றனர். தலையில் இடிந்து விழும் சூழ்நிலை உள்ளதால் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.