/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிதிலமடைந்துள்ள தீயணைப்பு நிலைய சுற்றுச்சுவரால் பாதிப்பு சிதிலமடைந்துள்ள தீயணைப்பு நிலைய சுற்றுச்சுவரால் பாதிப்பு
சிதிலமடைந்துள்ள தீயணைப்பு நிலைய சுற்றுச்சுவரால் பாதிப்பு
சிதிலமடைந்துள்ள தீயணைப்பு நிலைய சுற்றுச்சுவரால் பாதிப்பு
சிதிலமடைந்துள்ள தீயணைப்பு நிலைய சுற்றுச்சுவரால் பாதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:42 PM

உடுமலை; உடுமலை தீயணைப்பு நிலைய சுற்றுச்சுவர் இடிந்து, பல ஆண்டுகளாக கட்டப்படாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
உடுமலை பொள்ளாச்சி ரோட்டில், தீயணைப்பு நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், பிரதான ரோடு பகுதியில் அமைந்துள்ள சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுகிறது.
பாதுகாப்பு இல்லாத சூழலில், தட்டிகள் வைத்து தற்காலிகமாக மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவருடன், வளாகத்திற்கான 'கேட்' ம் உடைந்து விட்டதால், திறந்த வெளி அலுவலகமாக மாறியுள்ளது. உடைந்த காம்பவுண்ட் சுவரை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.